கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

கொரோனா பெருந்தொற்று மருந்துகள் மற்றும் அதன் சிகிச்சை உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டது என மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அப்போது, மருந்துகளுக்கான சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைக்கவில்லை என்று பங்கஜ் சவுத்ரி கூறினார்.