இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 954 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த மேலும் 214 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதில், 213 உயிரிழப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 355 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/