பெண்கள், குழந்தைகளுக்கான உதவி எண்!!!சட்டசபையில் அதிரடி!!

தமிழக சட்டசபையில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை வாசித்தார்.

கீதா ஜீவன்

267 குழந்தைகள் 2021-2022ம் ஆண்டில் தத்து வழங்கப்பட்டுள்ளனர்.பெண் சிசுக்கொலையை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மொத்தம் 5,781 குழந்தைகள் கடந்த மார்ச் 2022 வரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான பாதுகாப்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான உதவி எண்கள்

அதில் குழந்தைகளுக்கான உதவி எண்&1098 என்றும், மகளிருக்கான உதவி எண்& 181, முதியோருக்கான உதவி எண்& 14567 என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இணையதள குற்றங்களை தடுக்க உதவி எண்&1930 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/