ஹீரோவா இருந்து வில்லனாக மாறிய நடிகர்கள்…இந்த லிஸ்டில் டாப் ஹீரோவும் இருக்காங்களே!….

ரசிகர்களின் விருப்பமான ஹீரோக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்களின் ஆதரவை பெறுவது கஷ்டம் என அறிந்தும் வில்லன் கதாபாத்திரைத்தை தைரியமாக ஏற்று நடித்த ஹீரோக்களின் லிஸ்ட் இதோ ….

திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளனர் சில தமிழ் முன்னணி நடிகர்கள்

நடிகர் நரேன் :

மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்இவர் முகமூடி என்ற மிஷ்கின் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

நடிகர் வினய் :

வினய் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஜீவாவின் உன்னாலே உன்னாலே என்ற படத்தில் சதா மற்றும் தனிஷா முகர்ஜியுடன் அறிமுகமாகினார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, படம் மிக பெரிய வெற்றி பெற்றது.இதுவரை இவர் 12 படங்கள் வரை நடித்துள்ளார்.இவரும் மிஷ்கின் படமான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக அறிமுகமானார்.மேலும் டாக்டர் படத்திலும் வில்லனாக நடித்தார்.

நடிகர் :

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.கல்யாண சமையல் சாதம்,சீனா தானா 001,கண்ணும் கண்ணும் என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.அஞ்சாதே, திருட்டு பயலே திரைபடத்தில் வில்லனாக நடிக்க தொடங்கினார்.

நடிகர் அர்ஜுன் :

அர்ஜூன் புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டும்மில்லாது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், வசன எழுத்தாளராகவும் உள்ளார்.அவரை அனைவரும் ஆக்சன் கிங் என்று அழைப்பார்.இவர் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார்.அவர் இரும்புத்திரை படத்தில் சிறந்த வில்லனாக நடித்திருப்பார்.

நடிகர் அரவிந்த சாமி :

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.இவர் கடல்,தனி ஒருவன்(சித்தார்த் அபிமன்யு),போகன் போன்ற படங்களில் சிறந்த வில்லனாக நடித்திருப்பார்.

எஸ். ஜே. சூர்யா :

ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றவர்.

இயக்குனராக இருந்த இவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்,அன்பே ஆருயிரே,மகா நடிகன்,நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.இவர் ஸ்பைடர், மெர்சல் படங்களில் முன்னணி ஹீரோவுடன் வில்லனாக நடித்துள்ளார்.