4 நாட்களுக்கு விடுமுறை!?

இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை .தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை தினங்களாக வருவதால், பொதுமக்கள் கோடை விடுமுறையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1ம் தேதி  உழைப்பாளர் தினத்தையும், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை.

ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

மே 2ம் தேதியை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மக்கள் முன்தினமே தயாராகவும், சொந்த ஊர் செல்லவும் மே 2ம் தேதி விடுமுறை அளித்தால் அனைவரும் மகிழ்ச்சியடைவர்.

கொடைக்கானல்

கோடை காலத்திற்கு குற்றாலம், திருநெல்வேலி, தென்காசி, கொடைக்கானல், நீலகிரி, கொல்லிமலை, ஏலகிரி என்று சுற்றுலா தலங்கள் அனைத்திலுமே கூட்டம் நிரம்பி வருகிறது.

கொடைக்கானல், ஊட்டி மலைப் பகுதிகளில் வாகனங்கள் 3 கி.மீட்டர் தூரத்திற்கு நிற்கின்றன.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/