நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளை ஏப்ரல் 29ம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம்

ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழா ஸ்ரீரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம் முழுவதுமே விழாக்கோலம் தரித்திருக்கும்

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ,தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை ,மாலை வேளைகளில் ஸ்ரீரங்கத்து நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும், தீவிர கண்காணிப்புக்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/