சென்னைக்கு அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம்! முதல்வர்

ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பல பரிசுகளை அறிவித்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்,தொடர்ந்து உற்சாகப்படுத்தி, சலுக்கைகளையும் அறிவித்து வருகிறார்.

சட்டசபை ஸ்டாலின் முதல்வர்

தமிழக சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னிலை மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார்.

வடசென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான குத்துச்சண்டை மையம் அமைக்கப்படும் என்ற அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் சென்னைக்கு அருகே மெகா விளையாட்டு நகரம் ஒன்று அமைக்கப்பட உள்ளது

ரூ.25 கோடி மதிப்பீட்டில் ‘ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல்’ என்ற திட்டம் செய்படுத்தப்பட உள்ளது ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டு வீரர், வீராங்கனகள் ஊக்குவிக்கப்படுவார்கள்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/