சிறார்களுக்கு கோவாக்சின் – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.

#BREAKING: இவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி - பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI ஒப்புதல் வழங்கியிருந்தது.

நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/