2022-ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்!.. என்ன இதுதான் முதலில் இருக்கா?…

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இதுவரை இந்த ஆண்டு (2022) வெளிவந்த படங்களில் தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.வலிமை:

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருந்தார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார்.

2.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

3.RRR:

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி வெளியான படம் ‘RRR’. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடித்திருந்தனர்.  முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

4.கே.ஜி.எஃப் 2 :

யாஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான படம் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.

5.எதற்கும் துணிந்தவன் :

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 10-ஆம் தேதி வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். சூர்யாவுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய் நடித்திருந்தார்.

இதில் பீஸ்ட், RRR, Kgf 2 இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது,இறுதி வசூலை வைத்து பார்த்தால் இந்த டாப் லிஸ்ட் விவரம் கண்டிப்பாக மாறும்.