29-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (21-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்ய, வரும் மே மாதம் 7-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/