அழுகி சடலமாக கிடந்த ஆண் யானை.. வனத்துறையினர் விசாரணை..!!

நீலகிரி -சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட,வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர்.

அப்போது அழுகிய யானை சடலமாக கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இது 1 வயதுடைய ஆண் யானை என்பது தெரியவந்தது.

இந்த யானை மற்றொரு யானை தாக்கி இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பரிசோதனை அறிக்கை வந்த பிறகே யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/