சீமான் உடல்நிலை எப்படி உள்ளது? நாம் தமிழர் கட்சியின் டுவிட்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான சீமான் திடீரென செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சீமான் உடல்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் டுவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!

வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.

தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். முழு உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு, வீடு திரும்பினார்!