கனமழை எதிரொலி: 1-9 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

கனமழை எதிரொலி: 1-9 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார் .

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.