முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்தாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த படங்கள் சின்னத்திரையில் வெளியிட்டால் நிச்சயம் டிஆர்பி ரேட்டிங் இருக்கும் அல்லவா?
அஜித், இயக்குநர் எச் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்த படம் வலிமை திரைப்படம் . இப்படத்தை வருகின்ற மே1 ஆம் ஜி தமிழில் ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது.
தலயின் படம் என்பதால் டிஆர்பியை எகிற வைப்பார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
லோகேஷ் கனகராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்து மாஸ்டர் திரைப்படம் சன்டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
முன்னதாக சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு, சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்கிற தகவல் கிடைத்தது.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தோடு நேரடியாக மோத வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சன் டிவி மாஸ்டர் திரைப்படத்தை களமிறக்குகிறது
மாநாடு,புஷ்பா போன்ற வெற்றி படங்கள் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/