இளையராஜாவுக்கு நோட்டீஸ்? ஜி.எஸ்.டி. ஆணையரகம்

40 ஆண்டு கால இசை பயணத்தில் தற்போழுது இசைஞானி இளையராஜா அரசியல் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

இளையராஜாவுக்கு 1.86 கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்துமாறு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வரி பாக்கியில் இருந்து தப்பிப்பதற்காகவே இளையராஜா, ‘மோடியும், அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் முன்னுரை எழுதியுள்ளாரோ என விமர்சனங்கள் எழுந்தது

இளையராஜா

தொடர்ச்சியாக 2வது சம்மனுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. 3வது சம்மன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக இளையராஜாவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது.

3 சம்மனுக்கும் ஆஜராகாத இளையராஜாவுக்கு இறுதி நோட்டீசை அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/