ஆன்லைன் உணவு டெலிவரி : கடும் எச்சரிக்கை!!

ஆன்லைன் மூலம் உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என கடிதத்தை தமிழக சுற்றுச்சூழல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹ¨ எழுதியுள்ளார்.

ஸ்விக்கி, சொமேட்டோ

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி, சொமாட்டோ ,பொருட்களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட், அமேசான், சூப்பர் மார்க்கெட்டுகள் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்க தனி மனிதனும் முன்வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

உணவில் நச்சுப்பொருட்கள் கலப்பு! தடையை மீறி மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் !

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீதும், அதை பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/