போஸ்டர் ஒட்டினால் அபராதம்!! சென்னை மாநகராட்சி

மக்களிடையே போஸ்டர் கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது . பிறந்தநாள், சினிமா, கொண்டாட்டம், பொழுதுபோக்கு விளம்பரங்கள்,திருவிழா, கல்யாணம் முதல் கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி வரை அனைத்தும் போஸ்டர்களே.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போஸ்டர்

அரசு மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள்,பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தி வருகின்றன.

தெருக்களின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் மேற்கொள்ளும் நபர்கள்,நிறுவனங்களின் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/