அடுத்த 4 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு  மிதமான மழை பெய்யக்கூடும்

தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள்,காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

மழை

நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் ஓரிரு இடங்களில் லேசானது மழை பெய்யலாம்.

மார்ச் 27ம் தேதி  மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம்

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/