சப்பரத் திருவிழா ;முதலமைச்சர் நிதிஉதவி !!

நாகப்பட்டினம், திருச்செங்காட்டாங்குடியில் சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது நிலைதடுமாறி தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார்,

 

அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் 5 இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/