சிவகாசி வெடிவிபத்து : நிவாரண உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த முப்பத்து இரண்டே வயதான திரு.அரவிந்த் என்பவர் உயிரிழந்தார்

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.