பெட்ரோல், டீசல் உயர்வு தேசத்துரோகம்: சுப்பிரமணியன் சுவாமி

பெட்ரோல், டீசல் உயர்வு தேசத்துரோகம்: சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வு தேசத்துரோகம் என பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாட்டில் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கி வருகிறது. இப்படிச் செய்வது நிதி அமைச்சகத்தின் அறிவுப்பூர்வமான திவால். தேச விரோதமும் கூட. இந்த விலைகளை உயர்த்துவதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு நிதியளிப்பது முற்றிலும் திறமையின்மை