தஞ்சை தேர் விபத்து : குடியரசுத் தலைவர் இரங்கல்

தஞ்சாவூர் – களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும்.

அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வரும்போது, அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது

ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/