கொரோனாவிற்கு இனி தடுப்பூசிக்கு பதில் இதுவா!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி இதனை கட்டுப்படுத்த அவசர கால பயன்பாடுக்கு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளன.

பாக்ஸ்லோவிட்

தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வந்த போதிலும் கொரோனா உருமாற்றம் அடைந்து மீண்டும் மீண்டும் தாக்க தொடங்கியுள்ளது.

தற்போது மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

பாக்ஸ்லோவிட் என்ற இந்த மாத்திரையை தீவிர கொரோனா தொற்று உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்தாதாவர்கள், வயதானவர்கள் அனைவரும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.

பாக்ஸ்லோவிட்

இந்த மாத்திரையை 5 நாட்களுக்கு காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிடலாம்.

இதில் நிர்மாட்ரெல்விர் மருந்து கொரோனா வைரஸ் தனது புரதத்தை பிரதி எடுக்கவிடாமல் தடுக்கிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/