ரயில் விபத்து- 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் நடைமேடை எண்- 1ற்கு கொண்டு வரப்பட்ட மின்சார ரயில் நேற்று மாலை தடம்புரண்டது.இதில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

முதலில் விபத்திற்கான காரணம் பிரேக் பிடிக்காதது என்று சொல்லப்பட்டது.

சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் பவித்ரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான பெட்டிகள் மீண்டும் மீட்கப்பட்டது. மற்ற வழித்தடங்களில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/