28ம் தேதி வரை மழை இருக்கா ?எந்தந்த மாவட்டத்துக்கு ??

இம்மாதம் 28ம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

ஏப்ரல் 26 ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

மார்ச் 27ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை , கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/