இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டுகள் ரத்தா ??

கொரோனா தொற்று சூழலில் மத்தியில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனர்களுக்கு மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கியது .

இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டுகள் ரத்து?

ஆனால், இந்த இலவச பொருட்களை பெறும் பயனர்களிடம் ஏசி, ஜெனரேட்டர், நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுத உரிமம் இருந்தால் அவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் இலவசங்களை பெறுவதற்கு உரிமை இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அப்படிப்பட்டவர்கள் ரேஷன் பொருட்களை பெறுவது கண்டறியப்பட்டால் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏசி, ஜெனரேட்டர், நான்கு சக்கர வாகனம், டிராக்டர் ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ரேஷன் அட்டைகளை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் 78 புதிய அறிவிப்புகள் !!

அப்படி ஒப்படைக்காதவர்களின் ரேஷன் அட்டைகள் உணவு வழங்கல் துறை மூலம் கண்டறியப்பட்டாலோ, அல்லது ரேஷன் கார்டுகள் சரிபார்க்கப்படும் போது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டாலோ ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, பயனர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்