கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்!!

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

maths student

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 20-ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளைக் கவனிக்க கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கோடை விடுமுறையை ஒட்டி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.