சுவையான மாம்பழம் வாங்கனுமா !! ‘தொழில் ரகசியம்’ இதுதான்!

கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும்,அதே நேரத்தில் தான் மாம்பழ சீசனும் நமக்கு வந்திருக்கும். சுவையான மாம்பழம் வாங்க ஆசை இருக்கும் ஆனால் வாங்க தெரியாது பலருக்கு,மேலும் மாம்பழத்தை கண்ணை மூடிக்கொண்டு வாங்குவோருக்கான செய்தி தான் இது!

எது நல்ல மாம்பழம்? எது இல்லை என்பதை கண்டுபிடிப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.

பெஸ்ட் மாம்பழம் தேர்ந்தெடுக்கும் வழிமுறை

மாம்பழம் வாங்க செல்கையில், அதனை கலரை வைத்து முடிவு செய்யாதீர்கள். மாம்பழம் பல வகையான சைஸ் மற்றும் ஷேப்களில் வருகிறது.

உதாரணமாக, சில மாம்பழங்கள் பச்சையிலிருந்து சிவப்பு நிறத்திலும், மஞ்சளில் இருந்து ஆரஞ்ச் நிறத்திலும், சிலது மஞ்சள் நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்ச் நிறத்திலும் முடிந்திருக்கும். எனவே, மாம்பழம் நல்ல பழுத்து இருக்கிறதா என்பதை நிறத்தை வைத்து கணித்திட முடியாது. அதன் தோற்றத்தை கண்டு ஏமாறாதீர்கள்

பழுத்த மாம்பழத்தின் வாசனை இனிமையாக இருக்கும். அவற்றின் தண்டுகள் பழ வாசனையுடன் இருக்கும். அந்த வாசனை நன்கு வரும்,பழத்தின் தண்டு முடிவை செக் செய்ய வேண்டும்.

மாம்பழம் மென்மையாகும் பட்சத்தில், அது முழுமையாக பழுத்துவிட்டது என்பது அர்த்தம். முதிர்ச்சி பழம், பழுக்காத பழத்தை விட சற்று எடை கனமாக இருக்கும் என்பதை நன்கு அறிவோம். மாம்பழம் வழக்கத்தை விட கனமாகத் தோன்றினால், எச்சரிக்கையாக இருங்கள். அது, பழத்தின் முதிர்ச்சியின் அறிகுறியாகும்.

அதிக உறுதியான மாம்பழம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை பழுக்க நீண்ட நேரம் எடுக்கும்.

மாம்பழத்தின் தோலில் உள்ள கருப்பு புள்ளிகள் பழம் ஏற்கனவே பழுத்திருப்பதைக் காட்டுகிறது. அதேபோல், மாம்பழத்தின் சுருக்கமான தோற்றம் பழம் சீக்கிரம் பறிக்கப்பட்டதை காட்டுகிறது. அவை சுவையாக இருக்காது என்று கூறலாம்.

புளிப்பு அல்லது மது வாசனை இல்லாத மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாம்பழம் பழுக்க ஆரம்பிக்கும் வரை, அதனை அறை வெப்பநிலையில் வைப்பது சிறந்தது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/