பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு…

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் இம்மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

ஜூன் 13 கிடையாது ! பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு... கல்வித்துறை அறிவிப்பு

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் ,மே 13ம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.

 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோடை விடுமுறை முடிவடைந்து அடுத்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜூன் 13ம் தேதி பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.