மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அத்துடன் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் விலை நிலவரம் !!

இதில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிகள் பற்றிய நலத்திட்டங்களை அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளது.

இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12000 ரூபாய் வரை மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

வருகிற ஜூலை 15ம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இந்த நன்னாளை முன்னிட்டு மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் உயர் கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.