முதல்வர் ஸ்டாலின் 78 புதிய அறிவிப்புகள் !!

தமிழக சட்டசபையில் இன்று (மே 10) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையின்போது முதல்வர் ஸ்டாலின் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

காவல் ஆளிநர்களுக்கு காப்பீடு ரூ.60 லட்சமாக உயர்வு: முதல்வர்

அறிவிப்புகள்:

* சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி கல்லூரி வண்டலூர் உயர் காவல் பயிற்சி வளாகத்திற்கு மாற்றப்படும்.
* ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் 9 கோடியில் அமைக்கப்படும்.
* காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்.
* சென்னை பெருநகர காவலில் மேலும் 3 வழித்தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்.
* இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘பறவை’ என்னும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க ‘பருந்து’ என்ற செயலி உருவாக்கப்படும்.
* காவலர்களுக்கான நல மேம்பாட்டிற்காக ‘மகிழ்ச்சி’ என்ற செயல்திட்டம் ரூ.53 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
* சென்னை பெருநகர காவலர்களுக்கு ‘ஆனந்தம்’ என்ற பெயரில் புதிய திட்டம் துவங்கப்படும்.
* தீயணைப்பு வீரர்களின் நலன் காக்க ‘தீ ஆணையம்’ உருவாக்கப்படும்.
* மாநில கணினி சார் குற்றப்பிரிவுக்கு கட்டடம் கட்டப்படும்.
* கழிவு செய்யப்பட்ட காவல்நிலைய காவலர்களுக்கான 200 ஜீப்புகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
* சென்னை கொளத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படம்.
* இரவுக் காவல் பணியில் இருக்கும் அனைவருக்கும் சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும்.
* 65 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் ரூ.2.5 கோடி செலவில் பராமரிக்கப்படும்.
* சென்னை துறைமுக ஆய்வகத்தில் எல்சிஎம்எஸ் என்ற புதிய கண்காணிப்பு கருவி வாங்கப்படும்.

புதுமணப்பெண் விபரீத முடிவு

* திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்களுக்கு 5 சதவீதம் ஊதியமாக அளிக்கப்படும்.
* மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக மறுசீரமைக்கப்படும்.
* கடலூர், தஞ்சாவூரில் 283 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
* காவலர் பயிற்சி வளாகத்தில் கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* வெளிமாநில குற்றவாளிகள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி ரூ.9 கோடியில் அமைக்கப்படும்.