10 விமானங்கள் ரத்து!!

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி இன்னும் வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக வலுப்பெற்றது.

விமானங்கள்

அதற்கு அசானி என்று வானிலை ஆய்வாளர்கள் பெயர் சூட்டினார்கள்.வடமேற்கு திசையில் நகர்ந்த அசானி புயல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா பகுதிகளில் தற்போது தீவிர மழை கொட்டி வருகிறது.

தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வட்டி விகிதம் மாறியாச்சு..

மழை மாணவி

மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் உட்பட பல நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.