10ம் வகுப்பு பொதுத் தேர்வு

இன்று காலை தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு துவங்குகிறது.

10 ம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத் தேர்வுகள் இன்று மே 6ம் தேதி துவங்கி, மே 30 வரை நடைபெற உள்ளன. 11ம் வகுப்பு தேர்வுகள் மே 10ம்  தேதி முதல் மே 31 வரை நடைபெறுகின்றன.

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தமிழகம் மற்றும் புதுச்சேரி  முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 3936 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 9,55,474  பேர் எழுத உள்ளனர்.
பிளஸ்1 பொதுத் தேர்வு 3119 மையங்களில் 883884 பேர் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மொத்தம் 267 675 பேர் எழுத உள்ளனர்.
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.