10-ம் வகுப்பு மார்க் போதும் தேர்வு இல்லாமல் தபால் துறையில் வேலை !!

இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தேவை?

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். 10 ஆம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்பதால், நீங்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

கடந்த முறை பெரும்பாலும் 97 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. குறைந்தப்பட்சமாக 87 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை குறைவு.. ஹேப்பி நியூஸ்.!!!!

இதன்மூலம், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதேநேரம் 90 சராசரி மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற நிறைய பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

430 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ள மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.