இலங்கையின் புதிய பிரதமர் உறுதி!

ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக 6-வது முறையாக இன்று பொறுப்பேற்றார்.

  1. 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து கொழும்புவில் இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.