ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46). டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார்.
கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.