பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்!

சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரைச் சேர்த்து வைக்க, தன்னுடைய உயிரை பணயமாக வைத்து தற்கொலை செய்துள்ளார் +2 மாணவன் தருண்.

நாமக்கல்,நாரைக் கிணறு பிரிவு பகுதியில் விவசாயம் பார்ப்பவர் ரவி. இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நர்மதா என்ற மகளும், 17 வயதான தருண் என்ற மகனும் உண்டு.

இவரது மகன் தருண் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியும் அவரது மனைவி மேகலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால் தருண் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இது குறித்து தனது நண்பர்களிடம் அடிக்கடி புலம்பியுள்ளார்.

தருண் இரவில் திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் தருணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தருண் தற்கொலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா??..

கடிதத்தில், என் சாவிலாவது நீங்கள் இணைய வேண்டும் அம்மா… அப்பா’’ என்று எழுதி உள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

பிரிந்து போன தாய், தந்தையை சேர்த்து வைப்பதற்காக தருண் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.