4 மில்லியன் வேலை வாய்ப்புக்கள்!! மானியம் வழங்கும் மத்திய அரசு..

இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பினை உருவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

job

2025-2026 வரை 5 ஆண்டுகளுக்கு விவசாயம் அல்லாத துறைகளில் குறு நிறுவனங்களை அமைப்பதை ஊக்குவிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்து விண்ணப்பங்களும் செயல்படுத்தும் முகமைகளும் கிராமப்புற அல்லது நகர்ப்புற வகையைப் பொருட்படுத்தாமல் செயல் வடிவம் தரப்படும். மேலும் இதில் திருநங்கைகள் சிறப்பு வகை விண்ணப்பதாரர்களாக கருதப்பட்டு அதிக மானியத்திற்கு தகுதியுடையவர்களாக கொள்ளப்படுவார்கள்.

SC, ST, OBC சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு, நகர்ப்புறங்களில் திட்ட மதிப்பில் 25%ம், கிராமப்புறங்களில் திட்ட மதிப்பீட்டில் 35 %ம் மானியமும் வழங்கப்பட உள்ளன. பெண்கள், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர், NER, ஆர்வமுள்ள மற்றும் எல்லையோர மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 64 லட்சம் நபர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மாநிலப் போக்குவரத்து துறைக்கு பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி !!

இதில் கால்நடை தீவனம், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர், பேக்கரி, ஓட்டல், அழகு நிலையம் போன்ற உற்பத்தி தொழில்கள், சேவை நிறுவனங்கள் தொடங்கலாம். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் Agency: DIC என குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மைய மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.