SBI யில் ரூ40000 சம்பளத்தில் 641 பணியிடங்கள்!!

  • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 641 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பின்படி மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுத்துறை கார்ப்பரேட் மையம், மும்பை, சேனல் மேலாளர் உதவியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் ஆதரவு அதிகாரி போன்ற பதவிகளுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விண்ணப்பங்களை வரவேற்கிறது.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த 18ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சேனல் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது குறித்த தகவல்களை அறிய www.jobstamilnadu.in என்ற இணையதள பக்கத்தில் காணலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.