மின்விசிறியில் தூக்கு போட்டு நடிகை தற்கொலை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

வங்காள மொழியில் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் பல்லவி டே. கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்தவர். பல சீரியல்களில் நடித்து வந்த காரணத்தினால் அவர் மக்களிடையே மிகவும் பிரபலம் என தெரிகிறது.

கொல்கத்தாவில் உள்ள கர்ஃபா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விசாரணை நடத்திவரும் போலீசார் இதை தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

நடிகை பல்லவியும் அவர் காதலர் சாக்னிக் சக்கரவர்த்தியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். அவர்களுக்குள் ஏதும் பிரச்சினையா, அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.