நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!!

சில நாட்களாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நாளை மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

மே 4 முதல் மே 28 வரை தொடர்ந்து வெயிலின் தாக்கம் மிகமிக கடுமையாக இருக்கும். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகரிக்கும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை தாண்டும்

அக்னிநட்சத்திர காலகட்டத்தில் பொதுவாக வெயில் அதிகமாக காணப்படும் என்றாலும் மே 11 முதல் 24 வரை வெயில் மிக அதிகமாக காணப்படும்.

இந்த நாட்களில் பகல் நேரத்தில் காலை 11 முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.வழக்கத்தை விட இரு மடங்கு தண்ணீர் குடிக்க வேண்டும் ..

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/