அசானி புயல் இன்று இரவு ஒடிசா கடலோரத்தை நெருங்குகிறது- கொல்கத்தா, அவுராவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அசானி புயல் ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியை நோக்கி 105 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அசானி புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் மேற்கு மத்திய கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் 2 நாட்களாக மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திராவில் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். கொல்கத்தா, அவுராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.