அசானி புயல் – 2ம் எச்சரிக்கை கூண்டு !!

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு உள்ளது .

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

புயல் உருவானதையொட்டி, கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தளபதி 66 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்!!

புயல் உருவாகும்பட்சத்தில் அதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். பின்னர் ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்

இந்த புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர வாய்ப்புள்ளது.அசானி புயல் விசாப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கனமழையை இந்த புயல் வரவழைக்கக் கூடும்