அட்சய் திருதி – 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் இது தான்!!

அட்சதிருதியை தினத்தன்று எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தங்கம்வாங்கினால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.  இல்லத்தரசிகள் பலர் நகைக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். .

இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் மட்டும்தான் ஐஸ்வர்யம் பெரும் என அர்த்தமாகாது. இந்த நன்னாளில் பிறருக்கு உதவும் , தானம் வழங்குவது, புண்ணிய காரியங்களை செய்வதும் சிறப்பு வாய்ந்தவையாக அமையும். எனவே தங்கம் வாங்குவதை விட தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இதையேதன் புராணக்கதைகளும் சுட்டிக்காட்டுகின்றன.  அதன்படி 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல்  :

அட்சய திருதியை
அசுவினி நட்சத்திரக்காரர்கள் கதம்ப சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன் ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி நட்சத்திரக்காரர்கள்  நெய்தானம் தானம் அளிக்கலாம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள்  சர்க்கரை பொங்கல் தானம் அளிக்கலாம். அத்துடன் கண்பார்வையற்றவர்களுக்கு உதவலாம்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பால் அல்லது பால் பாயாசம் தானம் அளிக்கலாம். அத்துடன் ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருக சீரிஷம் நட்சத்திரக்காரர்கள் சாம்பார் சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன்  உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தயிர் சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தயிர் சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன் கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம் நட்சத்திரக்காரர்கள் மிளகு கலந்த சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன் கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள்  வெண்  பொங்கல் தானம் அளிக்கலாம். அத்துடன் பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
மகம் நட்சத்திரக்காரர்கள்  கதம்ப சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன்  கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம் நட்சத்திரக்காரர்கள்  நெய் சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன் மனநிலை சரியில்லதவர்களுக்கு உதவலாம்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் சர்க்கரை பொங்கல் தானம் அளிக்கலாம். அத்துடன் கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்  பால் பாயாசம் தானம் அளிக்கலாம். அத்துடன் மனநிலை சரியில்லாதவர்களுக்கு உதவலாம்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள்  துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம் அளிக்கலாம் அத்துடன் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள்  உளுந்து வடை தானம் அளிக்கலாம். அத்துடன் வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள்  தயிர் சாதம் தானம் அளிக்கலாம்.அத்துடன்  கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள்  மிளகு கலந்த சாதம் தானம் அளிக்கலாம். பசுமாட்டிற்கு எள்ளு கொடுக்கலாம்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள்  வெண் பொங்கல் தானம் அளிக்கலாம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் கதம்ப சாதம் தானம் அளிக்கலாம். அத்துடன்  ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம் நட்சத்திரக்காரர்கள்  நெய் சாதம் தானம் அளிக்கலாம். ஏழைத் தம்பதிகளுக்கு பொருளுதவி செய்யலாம்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள்  சர்க்கரை பொங்கல் தானம் அளிக்கலாம். அத்துடன் நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம் நட்சத்திரக்காரர்கள்  சர்க்கரை கலந்த பால் தானம் அளிக்கலாம். அத்துடன் வறுமையில் வாடுபவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்  சாம்பார் சாதம் தானம் செய்யலாம்.அத்துடன்  கால்நடைகளுக்கு துவரம்பருப்பு தரலாம்.
சதயம் நட்சத்திரக்காரர்கள்  உளுந்து பொடி சாதம் தானம் செய்யலாம். அத்துடன் பசுமாட்டிற்கு  உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்  தயிர் சாதம் தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு கல்வி உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்  மிளகு சாதம் தானம் அளிக்கலாம். ஏழைகளுக்கு உணவு, உடை  வாங்கி தரலாம்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள்  வெண் பொங்கல் தானம் அளிக்கலாம். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி தரலாம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/