அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி அழியாத பலன்களை பெற்று தரும்.அட்சய திருதியை அன்று தர்ம சாஸ்திரங்கள் கூறும் வழியை பின்பற்றினால் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடையலாம்.
அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள்:
கோயிலுக்கு செல்லுதல், புனித நீராடுதல், பித்ரு காரியம், இறைவனை வழிபடுதல் மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்தல் போன்றவை ஆகும்.
உங்கள் ராசிப்படி என்னென்ன தானம் வழங்கலாம்?
மேஷம் : சாம்பார் சாதம் தானம் செய்வது நல்லது.
ரிஷபம் : பால் மற்றும் பால் பொருட்கள் தானம் செய்வது நல்லது.
மிதுனம் : பச்சைக் காய்கறிகள் தானம் செய்வது நல்லது.
கடகம் : தயிர் சாதம் மற்றும் நீர்மோர் தானம் செய்வது நல்லது.
சிம்மம் : காய்கறி சாதம் தானம் செய்வது நல்லது.
கன்னி : தக்காளி சாதம் தானம் செய்வது நல்லது.
துலாம் : பேரிச்சம் பழம் தானம் செய்வது நல்லது.
விருச்சிகம் : பழரசம் தானம் செய்வது நல்லது.
தனுசு : பானகம் தானம் செய்வது நல்லது.
மகரம் : நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நல்லது.
கும்பம் : இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நல்லது.
மீனம் : இனிப்புகள் தானம் செய்வது நல்லது.
அட்சய திருதியைக்கு கிடைக்கும் பலன்கள்:
சிப்பிகள் லட்சுமிக்கு பிடித்த பொருளாக கருதப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் சிப்பியை வாங்கி லட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அன்றைய நாளில் கோதுமை அல்லது பச்சரிசி போன்ற தானியங்களை வாங்கலாம். அட்சய திருதியை நாளில் தங்கத்தை போலவே தானியம் வாங்குவதும் உகந்ததாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் பானை வாங்குவது அதிர்ஷ்டம் தரும் என நம்பப்படுகிறது.
அட்சய திருதியையில் வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருட்களை வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அன்று புது வணிகத்தினைத் துவங்குவது, கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை செய்தால் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
அன்றைய தினத்தில் அன்னதானம், வஸ்திரதானம் செய்தல் நல்லது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/