அட்சய திருதி – நகைக் கடை சென்ற மக்கள்-எத்தனை டன் தங்கம் விற்பனை??

gold-price-in-chennai

தமிழகம் முழுவதும் நேற்று அட்ஷய திருதியை நாளாக கடைப்பிடிக்க, இந்த நன்நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என ஐதீகம்.

தங்க நகை விற்பனையாளர்கள், அட்ஷய திருதியை நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே விற்பனை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது என தங்க நகை விற்பனையாளர்கள் கூறினார்.

கொரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டு விற்பனை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது.

சாதரணமாக மற்ற நாட்களில் தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும்

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/