பராக் அகர்வால் பணி நீக்கம்?- ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்து இருந்தார்.

பராக் அகர்வால் பணி நீக்கம்?- ட்விட்டர் தலைமை செயலதிகாரியாகிறார் எலான் மஸ்க்

ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது” எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலோன் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் புதிய தலைமை நிர்வாகியாக பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் பதவியேற்கக் கூடும் என ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரக் அகர்வாலை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 325 கோடி ரூபாய் வரையிலும் எலான் மஸ்க் வழங்க வேண்டும்.

அவர் பதவியேற்கும்போதே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/