“இந்தி படங்களில் நடிக்க மாட்டேன்” – நடிகர் மகேஷ் பாபு அதிரடி

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த திரைப்படமான ‘மேஜர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதரபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு பேசியதாவது:

பான் இந்தியா நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்ற ஆசை எனக்கு துளியும் கிடையாது.

நான் நடித்த தெலுங்கு திரைப்படங்களும், மற்ற திரைப்படங்களும் நாடு முழுவதும் ரசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்று அது நிறைவேறி வருகிறது.

இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் தினந்தோறும் எனக்கு வந்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தியில் ஒருபோதும் நான் நடிக்க மாட்டேன். இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. தெலுங்கில் இருக்கும் நட்சத்திர அந்தஸ்து எனக்கு போதும்.இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.