சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி , புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60கிலோ மீட்டர் தொலைவில் அசானி புயல் நிலை கொண்டுள்ளது. நாளை காலைக்குள், அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, ஆந்திராவில் இன்று நடைபெறவிருந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.