‘பிளே ஆஃப் வாயப்பு இன்னும் இருக்கு’ வெற்றி முனைப்பில் சிஎஸ்கே

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 59-வது லீக் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது.

பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.இந்த சீசனில் சென்னையுடன் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.